↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய்யின் அப்பா என்பது எல்லோருக்கும் தெரியம். அவர் தனது கனவுப்படம் ஒன்றை படமாக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஏ.சி சிம்லா ஹேமமாலினி, அபி சரவணன், அஷ்வின், கல்கத்தா நடிகை பாப்ரிகோஷ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். டூரிங் டாக்கீஸ் என்ற பெயரில் படத்தை இயக்கி, தயாரித்து வரம் எஸ்.ஏ.சி, காணாமல்போன டூரிங் டாக்கீஸை மையமாக வைத்து மூன்று கதைகள் சொருகி அந்த மூன்றும் டூரிங் டாக்கீசில் இணைகிற மாதிரி எடுக்கிறாராம். இந்த மூன்று கதைகளில் ஒரு கதையின் ஹீரோவாக (75 வயது இளைஞராக) நடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு ஜோடியாக சிம்லாவைச் சேர்ந்த ஹேமமாலினி என்ற இளம்பெண் நடிக்கிறார் படத்தின் பல காட்சிகள் .சிம்லாவிலும் ராஜஸ்தானிலும் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது ரீரெக்கார்டிங் நடந்து வருகிறது.
டூரிங் டாக்கீஸ் படம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது, ஒரு படத்தில் இரண்டு கதைகள். இடைவேளை முன்பு ஒரு கதை. இடைவேளைக்கு பிறகு ஒரு கதை. இதில் ஒரு கதையில் 75 வயது வாலிபனின் காதல் தேடுதலையும் அவனுடைய இளைமைக் கால சேட்டைகளையும், குறும்புகளையும் காதல் விளையாட்டுகளையும் பதிவு செய்திருக்கிறோம். இந்த கதை முழுக்க முழுக்க சிம்லாவிலும், ராஜஸ்தானிலும் நடந்து முடிந்திருக்கிறது என்றார்.
Home
»
cinema
»
cinema.tamil
» ஹீரோவானர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்: ஜோடியாக நடிக்கிறார் சிம்லா அழகி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment