↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எழுத்தாளரும் கத்தி படக் கதைக்கு உரிமை கோரி போராடி வருபவருமான மீஞ்சூர் கோபியை, இயக்குநர் முருகதாஸ் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கத்தி படத்தின் கதை, காட்சிகளை முழுமையாகத் திருடி படமெடுத்ததாக மீடியாக்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் ஏஆர் முருகதாஸ்.

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவரும் முருகதாஸ், அடுத்தவர் கதையைத் திருடிப் படமெடுக்க நான் என்ன மூளை இல்லாதவனா என்று கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட கோபி, ஊடகங்களில் முறையிட்டு வருகிறார். கத்தி தன் கதைதான், அதை எப்படி முருகதாஸ் தனதாக்கிக் கொண்டார் என்பதற்கான ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் கோபி. இந்த நிலையில் கோபியை சாதிப் பெயர் சொல்லி முருகதாஸ் திட்டியதாக, கோபி தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விஷயத்தில் --- சாதியைச் சேர்ந்த அவன் ஜெயிக்கிறானா... --- சாதியைச் சேர்ந்த நான் ஜெயிக்கிறேனா.. பார்த்து விடலாம்.. அவனுடன் சமாதானமாக வேண்டிய அவசியம் இல்லை' என்று கோபி தரப்பினருடனான பேச்சுவார்த்தையின்போது முருகதாஸ் கோபமாகக் கூறினாராம். இதனை ஆடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர் கோபி தரப்பினர். ஏற்கெனவே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 'நானும் மனிதன்தான், எனக்கொண்ணுன்னா என் சாதிக்காரனும் வருவான்ல' என்று முருகதாஸ் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top