↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஐ. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது , ரஹ்மானின் இசையில் உருவான அணைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் செம்ம ஹிட் .
இயக்குனர் ஷங்கர் பாடல்களை படமாக்கவதில் பலே கில்லாடி, அவருடைய படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பிரம்மாண்டமாக மட்டுமில்லாமல் வியக்கத்தக்க விஷயங்களும் இருக்கும். அது போல் ஐ படத்தில் அனிருத் குரலில் வரும் மெர்சலாயிட்டேன் பாடல் அனைவரின் பிடித்த பாடலாக அமைந்து விட்டது. இப்பாடல் காட்சிகளின் உருவாக்கத்தில் பலரது கடின உழைப்பு அடங்கியுள்ளதாம், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பல கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் பாட்டில் இடம் பெற்று உள்ளது. உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சல் ஆவார்கள் என்று ஷங்கர் கூறினார்.
படத்தின் வெளியிடு பற்றி தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,'' ஐ படத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர். அவசரப்பட்டு நான் ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது. பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன். நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ’ஐ’ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன் '' என்று தெரிவித்தார்.
Home
»
cinema
»
cinema.tamil
»
emi
»
i
»
shankar
»
vikram
» மெர்சலாயிட்டேன் பாடல் பற்றி ஷங்கர் சொன்ன ரகசியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.