↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்துக்கு ‘என்னை அறிந்தால்’ என ஒருவழியாகப் பெயர் சூட்டிவிட்டினர். இத்தனை நாட்கள் காக்க வைத்ததால், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சத்யா’ என ஆளாளுக்கு ஒரு பெயரைச் சூட்டிவிட்டனர். ‘இந்த எதிர்பார்ப்பு கூட ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார் கெளதம் மேனன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி விட்டது. அடுத்து என்ன, டீஸர் தானே?

பொங்கலுக்கு படம் ரிலீஸாக இருப்பதால், இந்த மாதத்தில் டீஸரையும், அடுத்த மாதத்தில் பாடல்கள் மற்றும் டிரெய்லரையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. அதன்படி, இந்த மாதம் (நவம்பர்) 20ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் ரிலீஸாகிறது. படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு அஜித் வர மாட்டார் என்பதால், பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டை ஏதாவது எஃப்.எம்.மில் வெளியிடலாமா அல்லது நேரடியாக கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top