ஜேர்மனியில் நபர் ஒருவர் படுக்கையில் இருந்து தூங்கி எழுந்தபோது அருகில் இருந்த மனைவி இறந்திருந்த காரணத்தால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முனிச் நகரை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவில் தனது மனைவியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதையடுத்து போதையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் காலை எழுந்த அந்த நபர் தனது அருகில் தூங்கிய மனைவி இறந்ததை பார்த்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த பெண்ணின் உடம்பில் காயம் இருந்ததால் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனையில் பெண் தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதால் பொலிசார் அந்த பெண்ணின் கணவரை விசாரித்து வருகின்றனர்.
|
படுக்கையில் இருந்து தூங்கி எழுந்தவுடன் சிறை! மது போதையால் நிகழ்ந்த பரிதாபம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment