↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. படத்தை ஓட வைக்கவும், பரபரப்புக்காகவும் மாமனாரின் இன்பவெறி டைப்பான முறையற்ற உறவுகளை படமாக எடுத்தார். அதுவே சாமிக்கு எதிராக திரும்பியது. சாமி படம் என்றால் பலான படம் என்ற எண்ணம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. தற்போது அவர் இயக்கும் படம் ‘கங்காரு’ படம் இது நாள் வரை நான் சம்பாதித்து கெட்ட பெயர்கள் எல்லாம் தகர்த்து எரியும் என்று நம்பிக்கையில் உள்ளார் .கங்காரு படத்தில். அது என்னங்க ‘கங்காரு’? “எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு” என்கிறார் சாமி. “நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்த மாதிரி இங்கே நிலைமை இல்லை. யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. எது எப்படியோ அது என் தவறுதான் அதற்காக இப்பொழுது வரை வருந்துகிறேன் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment