↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டீ விற்பனை செய்தவர் (சாய்வாலா) நாட்டின் பிரதமராக முடியுமானால் நான் ஏன் மகாராஷ்டிரா மாநில முதல்வராக முடியாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக தாக்கியுள்ளார். 288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அனைத்தும் தனித்துப் போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக பாஜகவை சிவசேனா மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜகவை அதிகாரப் பசி கொண்ட கட்சி என்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை செத்த பாம்புகள் என்றும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் சாம்னாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் உத்தவ் தாக்கரே, கடந்த 25 ஆண்டுகாலமாக வெற்றி தோல்விகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். 25 ஆண்டுகால கூட்டணி முறிந்த போது நான் காயப்பட்டுப் போனேன் தவிர இறந்து போய்விடவில்லை. நாட்டின் பிரதமராக ஒரு டீ விற்பனை செய்தவரெல்லாம் வர முடியும் என்றால் நான் ஏன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக முடியாது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உத்தவ் தாக்கரேயின் இந்த விமர்சனத்தால் பாஜக மிகக் கடுமையாக அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Home
»
modi
»
news
»
news.india
» டீ விற்பனை செய்தவர் நாட்டின் பிரதமராக முடியுமானால் நான் ஏன் மாநில முதல்வராக முடியாது?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment