↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழகத்தில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு ரூபாய் 250 கோடிக்கு மதுபான விற்பனையை எட்ட அரசினால் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை நாளில் மாநில அளவில் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டது. வரும் தீபாவளி தினத்தில் டாஸ்மாக் கடைகளில் வருவாயை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடைகளுக்கு மதுபானம் வினியோகம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக மதுபானங்கள் விற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில், தீபாவளிக்கு முந்தைய நாளில் 170 முதல் 180 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளில் 250 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment