↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த கால ஆட்சியின்போது வாங்கியதையும் சேர்த்து இப்போது மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தான் ராணுவத்துக்கு திருப்பி கொடுத்துக்கொண்டிருப்பதாக பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டிற்குள் நிலவும் அரசியல் சிக்கல்களில் இருந்து, திசை திருப்பவும், காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த பல நாட்களாக காஷ்மீர் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீர் குடிமக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயரும் சூழ்நிலை உருவானது. டெல்லியில் இருந்து எந்த உத்தரவும் வராத நிலையில், பல்லை கடித்தபடி பொறுத்துக் கொண்டிருந்தது இந்திய ராணுவம்.
இந்நிலையில்தான், கடந்த வாரம், மிக முக்கிய உத்தரவு ஒன்று, பிரதமர் அலுவலகத்தில் இருந்து எல்லைக்கு பறந்துள்ளது. எந்த உத்தரவுக்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவம் காத்துக்கொண்டிருந்ததோ அந்த உத்தரவுதான், இன்ப தேன் போல இந்திய ராணுவத்தினரின் காதில் பாய்ந்தது. ஆம்.. இனிமேலும் பொறுத்தது போதும், பொங்கி எழுங்கள் என்ற தகவல்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்த சேதி. பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்திக்க வேண்டும் என்பது அதில் கொசுரு செய்தி.
இதுபோதாதா தினவெடுத்த தோள்களுடன் காத்திருந்த நமது ராணுவத்தினருக்கு. எடுத்தனர் ஆயுதங்களை, தொடுத்தனர் தாக்குதல்களை. எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் எதிர்தாக்குதல் இருந்தது என்றால், வடிவேலு பாணியில் வெள்ளைக்கொடிக்கு பாகிஸ்தான் வேலை கொடுக்கும் அளவுக்கு இருந்தது.
"மோடி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு இந்த நிலைதான் ஏற்படும் என்று நாங்கள் அஞ்சினோம்" என்று சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்சுக்கு வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரியும், அந்த நாட்டின் மிகப்பெரிய செக்யூரிட்டி கம்பெனியின் சேர்மனுமான இக்ரம் சேகல். மேலும், பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தவும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த திடீர் மாற்றத்துக்கு காரணகர்த்தாக்களில் ஒருவர் இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜீத் தோவல் என்கிறது பாதுகாப்பு வட்டாரம். இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரியான தோவல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்திய நர்சுகளை கடத்தியபோது அவர்களை பாதுகாப்பாக மீட்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தவர். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்தாக்குதலை நடத்துவதில் விருப்பம் உள்ளவர். இதை அவரது பழைய வரலாறு நினைவுபடுத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகள் எங்களிடம் தெரிவிக்கும் தொனியே வேறு மாதிரி இருக்கிறது. பழைய அரசைவிட இந்த அரசு மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த அரசு வெளியில் வீராவேசமாக பேசுவார்களே தவிர, ராணுவத்துக்கோ, எல்லை பாதுகாப்பு படைக்கோ, பாகிஸ்தானை தாக்க எந்த உத்தரவையும் பிறப்பித்ததில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்லையிலுள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் அந்த செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பாகிஸ்தான் மீது நெருக்கடியை இந்தியா அதிகரித்து வருகிறது. இது எதேர்ச்சையாக நடப்பதை போல தெரியவில்லை. திட்டமிட்ட எதிர்தாக்குதலாக தெரிகிறது. இந்தியாவிடமிருந்து வரும் தகவல் ஒன்றே ஒன்றைத்தான் தெரிவிக்கிறது. நாங்கள் உங்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்பதுதான் அந்த தகவல். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
எல்லையோர சுசெட்கார் பகுதியில் வசிக்கும் இந்தியரான ஆத்மா ராம் என்பவர் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தாக்குதலை கண்கூடாக பார்த்து வருகிறேன். ஆனால் இப்போது இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் வித்தியாசம் தெரிகிறது. பாகிஸ்தான் ஒரு முறை சுட்டால், இந்தியாவில் இருந்து 6 முறை சுடப்படுகிறது. இதற்கு முன்பு நான் பார்த்திராத இந்திய ராணுவத்தை இப்போது பார்க்கிறேன் என்று கூறினார்.
Home
»
modi
»
news
»
news.india
» 10 வருடமாக பொறுத்தது போதும், பொங்கியெழுங்கள்.. இந்திய ராணுவத்திற்கு மோடி பிறப்பித்த உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment