அஜித் தற்போது வீரம் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாட்ஷா போன்று இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் துவங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இதில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் கபீர் சிங்கும் கலந்து கொள்கிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். இப்படத்தின் வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment