↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பேஸ்புக்கில் தன்னுடைய மார்பழகை வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார் நடிகை விசாகா சிங். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் இருக்கு என்று பதிலடி கொடுத்துள்ளார். பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் நாயகியாக நடித்தவர் விசாகா சிங். இப்போது ‘வாலிப ராஜா' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விசாகா சிங், சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் உள்ள வாசகத்தை அந்த புகைப்படத்துக்கு கமெண்டாக போட்டிருந்தார். இந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவர் கூறிய வாசகத்தை பாராட்டி கமெண்டை வெளியிட்டு வந்தனர். அப்போது, ஒரு ரசிகர் அவரது மார்பு அழகாக இருப்பதாக கமெண்ட் போட்டிருந்தார். இதைப் பார்த்ததும் கொதித்துப்போன விசாகா சிங், அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டார்.
அதில், "உன்னுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை புகைப்படத்தை முதலில் நீக்கு. தைரியம் இருந்தால் உன்னுடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் போட்டு, இந்த மாதிரி கருத்துக்களைப் பதிவிடு. என்னுடைய மார்பு அழகுதான். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி கமெண்ட் அடிப்பாயா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசு. இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்," என்று அதிரடியாகக் கூறியிருந்தார்.
இந்த பதிவு போட்ட சில மணி நேரங்களிலேயே இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் தொடங்கிவிட்டது. உடனே, தன்னுடைய புகைப்படத்தையும், அந்த கருத்தையும் விசாகா சிங், வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். "இது தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதற்காக அந்த பதிவை நீக்கிவிட்டதாக" அவரே தெரிவித்துள்ளார். விசாகா சிங்கின் கருத்துக்கு இணைய உலகில் ஏக வரவேற்பு.
Home
»
cinema
»
cinema.tamil
» 'உன் அம்மா, சகோதரி, மனைவி, தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் இருக்கு!' - விசாகாவின் பதிலடி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment