பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள 'பாகுபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 13ஆம் தேதி திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் மாலை 4 மணிக்கு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று பாகுபாலி இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தென்னிந்தியாவின் முக்கிய திரையுலக வி.ஐ.பிக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்டமான திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி எட்டு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியீடு கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடப்பதாக இருந்து பின்னர் ஒருசில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், சுதீப், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூலை 10ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரை 1 கோடி பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment