
சிம்பு நடிப்பில் வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு என பல படங்கள் முடிந்து ரிலீஸிற்கு தயாராக இருந்தாலும் ஏதாவது பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போகிறது.
படம் தான் தள்ளி போகிறது என்றால் வாலு பட ப்ரஸ் மீட் கூட தாமதமாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே டிவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடி அவர்களின் மனவருத்தத்தை போக்கியுள்ளார் சிம்பு.
அப்போது விஜய் மற்றும் தனுஷுடனான நட்பு குறித்து ரசிகர்கள் கேட்டதற்கு சிம்பு, “ஒருவரை நான் நேசிக்கிறேன் என்றால் மற்றொருவரை வெறுக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. விஜய் எனக்கு நண்பர் மட்டுமல்லாது நல்ல சகோதரர் போன்றவர். அதேசமயம் நானும் தனுஷும் ஒருவரை ஒருவர் மதிக்க தெரிந்தவர்கள். அதனால் எங்களது நட்பு அழகாக உள்ளது” என்றார்.
0 comments:
Post a Comment