↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தங்களது ஹீரோக்களின் டிரெய்லரோ, ஃபர்ஸ்ட் லுக்கோ என எது வெளியானாலும் ட்விட்டரில் ட்ரெண்ட்டாக்குவதும் சமீப காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழில் எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித் என ரசிகர்கள் முக நூல், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சண்டையிட்டுக் கொள்கிறார்களோ அதே போல் மற்ற மொழிகளிலும் இந்த ரசிகர்களின் இணைய போர் நடந்த வண்ணம் தான் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு சல்மான்கான் தனது ட்விட்டர் தளத்தில் முதலில் உங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்துங்கள் என பல ட்வீட்டுகளை போட்டுள்ளார். அதில்....
எங்களுக்காக நீங்கள் சண்டையிட்டு உங்கள் அன்பை நிரூபிக்க தேவையில்லை. மேலும் அமீர் கான், ஷாருக் கான் கூட இதை விரும்பவில்லை, நாங்கள் மூவரும் நண்பர்கள் தான், ஏன் இந்த 1, 2,3 விளையாட்டு. இதற்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் உங்கள் வாழ்வை கொஞ்சம் பிசியாக மாற்றுங்கள், அதுவே எனக்கு சந்தோஷம்.
மேலும் எனக்கு இருக்கும் பிசியில் உங்களை எல்லாம் ஃபாலோ செய்ய முடியவில்லை என்று நீங்கள் சொன்னாலும் மகிழ்ச்சிதான். புரிந்துகொள்ளுங்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் போடும் சண்டையை நிறுத்துங்கள் என சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தனுஷ் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையும் அதுவே....
இப்போது நம் தமிழில் நடக்கும் ரஜினி, கமல், விஜய் , அஜித்.. ஏன் இப்போது அடுத்த தலைமுறை தனுஷ், சிம்பு போராட்டங்கள் கூட இணையத்தில் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
அதிலும் விஜய் , அஜித் ரசிகர்கள் இணைய போர் நாளொரு தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக தனி ட்ரோல் பக்கங்கள் வேறு உருவாக்கி சண்டைகளை போட்டு வருகிறார்கள், ரசிகர்கள்.
இதில் சில ரசிகர்கள் அஜித் குறித்தோ, விஜய் குறித்தோ போடப்படும் இணையச் செய்திகளில் கூட சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் துவங்கி, அவர்களின் குடும்பம் மற்றும் தங்களது குடும்பங்கள் வரை என தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிடுவது வழக்கமாகிவிட்டது.
இதற்கு ஒரே முடிவு சல்மான் போல் விஜய், அஜித் இணைந்து ரசிர்களிடம் அதே இணையத்தின் மூலம் பேசினால் மட்டுமே முடிவுக்கு வரும். செய்வார்களா? அப்படியே செய்தாலும் ரசிகர்கள் முதலில் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைப்பார்களா? அதையும் ட்ரெண்டாக்கி சண்டையிடும் போக்குதான் அதிகமாக உள்ளது.
Home
»
»Unlabelled
» சல்மான்கான் அறிவுரை... செய்வார்களா விஜய், அஜித்..?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment