சூர்யா எப்போதும் தன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தான் இருப்பார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மாசு திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால், சில ரசிகர்கள் இவரை கிண்டல் செய்ய, அவருடைய ரசிகர்களும் கோபமாக சமூக வலைத்தளங்களில் திட்ட, பிறகு வழக்கம் போல் வார்த்தை போர் ஆரம்பித்து விட்டது.
தற்போது சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘தயவுசெய்து இந்த சண்டையை விடுங்கள், என் ரசிகர்கள் இனி இதுபோல் எந்தவிதமான செயலிலும் ஈடுபட வேண்டாம், உங்கள் நேரங்களை பயனுள்ளதாக மாற்றுங்கள்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment