பிரபுதேவா நடிகராக இருந்து இயக்குனர் ஆனவர். தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துள்ளார். இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள்.
இதற்காக தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறினார். திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் இவர்கள் திருமணம் திடீரென ரத்தானது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். முறிவுக்கான காரணத்தை இருவரும் சொல்லவில்லை.
அதன் பிறகு பிரபுதேவா இந்தி பட வேலைகளில் பிசியானார். இந்த நிலையில் தான் தற்போது பிரபுதேவாவுக்கும் கன்னட நடிகை தேஜஸ்வினிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். யார் மீதும் இதுவரை காதலும் வரவில்லை. மனிதன் வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்பு திருமணத்துக்கு பின்பு என இரண்டு தளங்கள் உள்ளன. அந்த இரண்டிலும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment