இதற்காக சென்னை திரைப்படநகரில் ஒரு பெரியசெட் போடப்பட்டிருக்கிறதாம். இந்தசெட்டில் ஜூன் எட்டாம்தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்ததாம். கால¬யில் படப்பிடிப்புக்குழுவினர் எல்லோரும் படப்பிடிப்புத்தளத்துக்கு வந்துவிட்டாலும் படப்பிடிப்பைத் தொடங்கமுடியவில்லையாம், காரணம், செட் வேலை முடியாமல் போய்க்கொண்டேயிருந்ததுதான் என்கிறார்கள்.
அதனால் கடுப்பான இயக்குநர் சிறுத்தைசிவா, இன்று படப்பிடிப்பே வேண்டாம் நாளையிலிருந்து தொடங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்கள் எல்லோரும் திரும்பிச்சென்றுவிட்டனர். எல்லோரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டதால் அவர்களுக்கான தினக்கூலி மற்றும் பேட்டாவைக் கொடுத்தாக வேண்டுமாம்.
இதனால் ஒருநாள் செலவு செய்தும் படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை என்றாலும், இந்த இழப்பை இயக்குநர் சரிசெய்துவிடுவார் என்று சொல்லுகிறார்கள். எப்படி என்றால்? பத்துநாட்களில் எடுக்கத் திட்டமிட்ட காட்சிகளை ஒன்பதுநாட்களிலேயே அவர் முடித்துவிடுவார் அந்த அளவுக்கு வேகமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று படக்குழுவில் உள்ளவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment