ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் 'பிட் படம் டி' பாடல் ரசிகர்களை மட்டுமின்றி செலிபிரேட்டிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ஆர்யா, பிட் படம் டீ பாடலை மிகவும் விரும்பி ரசித்ததாக நேற்று கூறிய நிலையில் இன்று அவருடைய நெருங்கிய நண்பரான விஷால் பிட் பட பாடலை கேட்டு மிகவும் ரசித்ததாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோகேஷ் எழுதிய இந்த பாடலை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமாண்டிக் மற்றும் காமெடி படமாக அமைந்துள்ள 'த்ரிஷா இல்லைன்ன நயன்தாரா" படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்யாவை அடுத்த ப்ரியா ஆனந்தும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை சி.ஜெ.ஜெயகுமார் தயாரித்துள்ளார்
0 comments:
Post a Comment