↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயண் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் இசையமைத்த ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ள சந்தோஷ்நாராயணன் இதுவரை இளையதலைமுறை பாடலாசிரியர்களுடன் மட்டுமே பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த்- ரஞ்சித் படத்தில் கூட அவர் கபிலன் வைரமுத்து, உமாதேவி மற்றும் கானாபாலா ஆகியோர்களுடன் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் அவர்கள் கம்போஸ் செய்த மெட்டுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். கார்த்தியின் காஷ்மோரா" படத்திற்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டது. தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற வைரமுத்துவுடன் பணிபுரிந்தது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக கூறிய சந்தோஷ் நாராயணன் வைரமுத்துவுடன் இணைந்து அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
வைரமுத்துவின் அனுபவம் வாய்ந்த வரிகளுடன், இளமையான சந்தோஷின் மெட்டில் வரும் பாடல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
karthi
»
viramuththu
» முதல்முறையாக வைரமுத்துவுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment