அட்டகத்தி படத்தின் மூலம் பாடகராக படத்துறையில் அறிமுகமானவர் கானா பாலா. அட்டகத்தி படத்தின் பாடல்கள் சூப்பரஹிட்டானதைத் தொடர்ந்து, புகழ் பெற்ற பாடகாரான கானா பாலாவுக்கு, மளமளவென ஏராளமான படங்கள் குவியத்தொடங்கியது.
அவர் பணியாற்றிய படங்களின் புரமோஷனுக்காக பண்பலை வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது அவருக்கு சிக்கன் பிரியாணி தயாராக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவாராம்.
அதை சாப்பிட்ட பிறகு யாருடைய பார்வையிலும் படாதபடி சற்று தள்ளிப்போய் புகைபிடித்துவிட்டு வருவாராம். வரும்போதே தள்ளாடிக் கொண்டு வருகிறாராம். அதாவது கஞ்சா போதையை இழுத்துவிட்டு வருவதாக சொல்கிறார்கள்.
இப்படி தன்னிலை மறந்தநிலையில் இருப்பதால் பல நேரங்களில் தாறுமாறாகவும் நடந்து கொள்கிறாராம் கானா பாலா. அண்மையில் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கானா பாலாவை அழைத்தார்கள்.
அதற்காக அவருக்கு 45 ஆயிரம் சம்பளமும் வழங்கப்பட்டது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட அரங்குக்கு சொன்ன நேரத்துக்கு சென்று விட்ட கானா பாலாவை, அந்த சேனலைச் சேர்ந்தவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்.
சில நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தும் கூட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தில் திரும்பிச்சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து விஜய்டிவியை சேர்ந்தவர்கள் கானா பாலாவை தொடர்பு கொண்டபோது, சென்னைத்தமிழில் காய்ச்சி எடுத்திருக்கிறார்.
அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு, கானா பாலாவை மீண்டும் வரும்படி அழைத்துள்ளனர். வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் கானா பாலா. நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார்களாம். 45 ஆயிரத்தை திருப்பித்தர மாட்டேன் என்றும் தகராறு செய்தாராம். இப்படி அவர் பேசும் போது சற்று போதையுடன் இருந்தது போல தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோல் சமீபத்தில் வெளியான சோன்பப்டி என்ற படத்தின் புரமோஷனுக்காக ஒரு எப்.எம்.ரேடியோ ஸ்டேஷனுக்கு சென்றிருக்கிறார் கானா பாலா. அவர் போனபோது அப்படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வந்து சேரவில்லை. ஆன்திவேயில் இருந்திருக்கிறார்கள்.
என்னை வரச்சொல்லிவிட்டு அவங்க இன்னும் வரலையா? என்று கேட்டு விட்டு, கிளம்பிப்போய்விட்டாராம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கு வந்த சேர்ந்த சோன்பப்டி படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்களாம்.இப்படியாக கானா பாலாவைப் பற்றி கதைகதையாகச் சொல்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர் கானா பாலா. திரையுலகில் அவருக்குக் கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்வது மட்டுமல்ல இன்னொரு கடமையும் அவருக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவரைப்போலவே எத்தனையோ திறமையானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருப்பதோடு அவர்களையும் கைகொடுத்து கானா பாலா முன்னேற்ற வேண்டும். இதை புரிந்து உணர்ந்து கானா பாலா தன்னை திருத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது என்கிறது கோடம்பாக்கம்.
0 comments:
Post a Comment