மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும் அவருக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதை இப்படியே விட்டால் ஒழித்துவிடுவார்கள் என்று முடிவு கட்டிய சிங்காரவேலன், மொத்த விஷயத்தையும் சின்னம்மா காதுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்திருக்கிறாராம்.
முதல் கட்டமாக சொந்தங்களை சந்திக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. நடுவில் உருக்கமாக ஒரு ஆடியோ பதிவையும் தயார் செய்து அதை ரஜினியின் பார்வைக்கும் அனுப்பி வைத்துவிட்டார். ‘தலைவர் உங்க பேச்சை கேட்டுட்டாரு… அதை கேட்ட பின் சற்று நேரம் அமைதியா இருந்துட்டு எழுந்து போயிட்டாரு’ என்கிற அளவுக்கு அவருக்கு ஃபீட் பேக்குகள் போய் சேர்கின்றனவாம்.
திருவாளர் பொதுஜனத்திற்கு போரடிக்கிற அளவுக்கு இழுவையாகிவிட்ட இந்த லிங்கா விவகாரத்தில் எது நடந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்குதான் அமாவாசை அல்லது பவுர்ணமி. நமக்கென்ன வந்துச்சாம்!
0 comments:
Post a Comment