↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த 2008ஆம் ஆண்டில் சிம்பு நடிப்பில் நந்து இயக்குவதாக இருந்த 'கெட்டவன்' திரைப்படம் ஒருசில காரணங்களால் நின்று போனது. இந்த படத்தை மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், இதுகுறித்து சிம்புவிடம் நந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படத்தில் சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சிம்பு, "'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டம் எல்லாம் கண்டிப்பாக இல்லை. தற்போது 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (11/6/2015) சென்னை வந்துவிடுவேன். அதனைத் தொடர்ந்து 'வாலு' வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சிம்புவின் விளக்கத்தை தொடர்ந்து கெட்டவன் படம் மீண்டும் தொடங்கும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment