’கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். மேலும் வாலிப ராஜா, மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் நடித்துள்ளார். இது தவிர்த்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் , ‘ஒவ்வொருவரும் மற்றவருக்கு அந்நியன் தான் என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன’ . இதை ஒரு மீடியா நண்பர் அவருக்குக் கொடுக்க அதற்கு விஷாகா சிங் தனது நன்றியைத் தெரிவித்து புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
இதை பலரும் பாராட்டி, சூப்பர் , சிறப்பு என கமெண்டுகள் கொடுக்க ஒரு சில விஷமிகள் அவரது உடல் பாகத்தை மையப்படுத்தி கமெண்டுகள் போட விஷாகா சிங் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ’ஆமாம் நான் பெண்ணாக இருப்பதால் எனக்கு உறுப்புகள் உள்ளன. ஏன் உடலில் கை, தோள்பட்டை போன்றுதானே எல்லா பாகங்களும். தைரியம் இருந்தால் முதலில் உனது ப்ரொஃபைலில் உள்ள புகைப்படத்தை எடுத்துவிட்டு கமெண்ட் கொடு.
சரி நான் ஒப்புக்கொள்கிறேன், எனக்கு உறுப்புகள் உள்ளதுதான் , எனக்கு மட்டும் இல்லை பெண்ணாகப் பிறந்த எல்லாருக்கும் இருக்கிறது. ஏன் உன் தாய், சகோதரி, நண்பர்கள், அனைவருக்கும் உண்டு, அவர்களிடம் சென்று இப்படி கூறுவீர்களா’ எனினும் நான் காயப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேர் நின்று சொல் எனக் கூறியுள்ளார். விஷா சிங்கின் இந்த பதிலுக்கு ட்விட்டரில் பலரும் ஆதரவு கொடுத்து பாரட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment