ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் நிறம் நீலம். ஆயினும் மகிந்த ராஜபக்ஷவிற்கு பிடித்த நிறம் சிவப்பு தொடர்பான சிறிய ஆராய்வை மேற்கொண்ட போது தான் சற்று உண்மை நிலை தெரியவந்தது.
இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினைக் குறிப்பதாக சிவப்பு நிறம் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மஹிந்த குடும்பத்தினர் மொத்தமாக சிவப்பாடையில் மாறியிருந்தனர்.
மகிந்த ராஜபக்ஷவிற்கு இந்த சிவப்பில் அதிகம் ஈர்ப்பு. ஒரு வேளை சிவப்பு நிறம் ராசியானது என்று யாரேனும் ஜோதிடம் கணித்து கொடுத்தார்களோ என்னமோ தெரியாது சிவப்பின் மீது அவ்வளவு பற்று அவருக்கு.
சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது, அரச பேருந்துக்களுக்கு எல்லாம் தனக்குப்பிடித்த சிவப்பு நிறத்தினை பேருந்துகளுக்கு மாற்றி சிவப்புக்கலர் சிங்கிச்சா என்றாக்கியவர், தன்னுடைய கழுத்திலும் ஒரு சிவப்பு நிறத்துண்டை மாட்டியவாறு திரியும் ஒரு பழக்கத்தை உருவாக்கினார்.
மகிந்த என்றால் அது சிவப்பு நிறத்துண்டு என்றாகியிருந்தது. ஆனால் அவர் வகித்த கட்சியின் நிறம் என்னமோ நீலமாக இருக்க, நீலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சிவப்புத்துண்டுக்காரர்.
இப்போது நீலத்தின் தலைவரும் இல்லை இலங்கை தேசத்தின் தலைவரும் இல்லை என்று ஹம்பாந்தோட்டையில் படுத்திருந்தவர் திடீரென்று தனது ஆடை முழுவதையும் சிவப்பாக மாற்றியுள்ளார்.
அதற்கான பின்புலம் யாதொன்றுமில்லை புதிய கட்சியின் தோற்றுவாயாக இது அமைந்துள்ளது. இனி நீலக்கட்சியல்ல சிவப்புக் கட்சி.
தமிழக சினிமா பாடலைப் பாடி அரசியலில் புது உத்வேகம் கொள்வார் போல்… கண்ணைக் கசக்கும் சூரியனோ ரெட்….என்னும் பாடலை மாற்றி..... உயிரைக்கொல்லும் மகிந்தவோ ரெட் ரெட் ரெட் என.........!
ஆனால் நிறத்தினை பிரித்து அதற்கு ஒவ்வொரு தன்மையை கொடுத்திருக்கின்றார்கள் வல்லுநர்கள்.
சிவப்பு ஆபத்தின் அறிகுறி. சிவப்பு கோபத்தின் அடையாளம். இவையாவற்றுக்கும் மேலாக சிவப்பு நமது வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளுக்கான அடையாளம்.
மொத்தத்தில் சிவப்பு அழிவின் அடையாளம். இன்று சிவப்புக்கு மாறிய மகிந்தர் என்னவோ…?
0 comments:
Post a Comment