↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ajith, goutham menon
திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதில் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர்.

மாணவர்களின் கேள்விகளும், கௌதம் மேனனின் பதில்களும்…
கேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா? இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்து எடுப்பீர்கள்?
அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.
கேள்வி:– மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2–ம் பாகம் இயக்குவீர்களா?
விரைவில் என்னை அறிந்தால் 2–ம் பாகம் இயக்குவேன்.
கேள்வி:– உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
தமிழ் படத்தில் தமிழ் பேச தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போது தான் சரியான மொழி உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3 மொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். த்ரிஷாவையும் பிடிக்கும்.
கேள்வி:– நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது?
வாழ்க்கையில் நட்பு தான் சிறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top