சமீபகாலங்களாக தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்கள் பெருகிவிட்டன. இதனால் உள்ளூர் சின்னத்திரை கலைஞர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து டப்பிங் சீரியல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வரும் 15ம் தேதி சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் பெப்சி அமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை தொடர் இயக்குநர் பாலாஜி யாதவ், சென்னையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கடன் பிரச்னையின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.. டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தால், சின்னத்திரை கலைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்ட்டப்படுவதாகவும், அப்படி பாதிக்கப்பட்டவர்களில் பாலஜி யாதவும் ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு பெப்சி அமைப்பும், சின்னத்திரை கலைஞர்களும் வரும் ஏப்ரல் 15ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தேதியில் சின்னத்திரை படப்பிடிப்புகள் டப்பிங் உள்ளிட்ட வேலைகள் நிறுத்தப்பட உள்ளன. மேலும் இதுகுறித்த கூட்டத்தில் மறைந்த சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவிற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment