↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கூகுள் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த சாதனம் ஒரு சின்ன சாக்லெட் சைஸ் சாதனம் என்றுதான் தொழில்நுட்ப உலகில் பலரும் வர்ணிக்கிறார்கள்.

கூகுள் தந்துள்ள இந்த குரோம்பிட் சாதனம் ஒரு ரெடிமேட் கம்ப்யூட்டர் சாதனமாகும் . .
குரோம் இயங்குதளம் அடிப்படையாக கொண்ட இந்த டாங்கில் சாதனம் எந்த ஒரு டிவியையோ அல்லது லேப்டாப்பையோ குரோம் கம்ப்யூட்டர் ஆக மாற்றிவிடக் கூடுமாம்.

இந்த குரோம் பிட் சாக்லெட் பார் சைசுக்கு இருக்கும் இந்தச் சாதனம் 100 டாலர் விலைக்குள் கிடைக்கும் ஒரு முழு கம்ப்யூட்டர் என்று கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதை இணைப்பதன் மூலம் எந்த டிஸ்பிளேவையும் கம்ப்யூட்டராக மாற்றலாம். ஏற்கனவே உள்ள கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை மேம்படுத்தவும் இது சிறந்தது என கூகுள் நிறுவனம் சொல்கிறது.

இதே போல் ஒரு சாதனம் தயாரிக்க போவதாக இன்டெல் நிறுவனம் மற்றும் சில நிறுவனங்கள் போட்டி போடுகின்றணவாம்.

ACCES நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புது சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இந்த வகையான குட்டி குட்டி கம்ப்யூட்டர்கள்தான் வருங்காலத்தை ஆதிக்கம் செலுத்தி உலகை ஆக்ரமிக்கும் என வல்லுநர்கள் நிதர்சனமாக சொல்கின்றனர்.


இனிமேல் எங்கு சென்றாலும் ஒரு முழு கணினி எடுத்து செல்ல வேண்டுமானால் இது போன்ற ஒன்றை வைத்திருந்தால் போதும் , உலகம் வளருதா இல்ல சுருங்குதா என தெரியல !!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top