↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகை ரியா சென் வீட்டில் - தீ விபத்து! - Cineulagam
சந்தோஷ் சிவன் இயக்கிய ஆனந்தபத்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ரியா சென்.இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
ரியா சென் மும்பையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று காலை மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக ரியா சென்னும் அவருடன் தங்கி இருந்த அவரின் அம்மாவும் உயிர் தப்பியுள்ளனர்.
உடனே தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்த பிறகும், ஒரு மணி நேரம் கழித்தே அவர்கள் வந்துள்ளனர். அதற்குள் இரண்டு வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியது.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top