↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய ஒ.எஸ்ஸான ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3ல் எமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது. புளூடூத், வைபை போன்றவற்றின் செயல்பாடுகளையும் மேம்படுத்தியுள்ளது ஆப்பிள்.

இனிமேல் இலவச அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு பாஸ்வேர்ட் தேவையில்லை. அதேபோல் கூகுள் தளத்திற்கு செல்வதற்கான வழிமுறையும் இந்த மேம்படுத்தப்பட்ட வடிவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் தனி உதவி மையத்தின் செயல்பாடுகளையும் அதிகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் முன்பைவிட அதிக மொழிகளை பயன்படுத்த முடியும்.

இதைக்கொண்டு போனுக்கு அழைப்பு வந்த உடன் நேரடியாக ஸ்பீக்கரை பயன்படுத்தவும் முடியும்.

தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற குறுஞ் செய்திகள் பற்றி புகார் அளித்து தவிர்ப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது கவனத்தை ஐ.ஓ.எஸ்.9 பக்கம் திருப்பியுள்ளது. வரும் ஜூன் மாதம் இந்த புதிய இயங்குதளம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top