இங்கிலாந்து அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த முன்னணி வீரரான கெவின் பீட்டர்சன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான பீட்டர்சன், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
தற்போது இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.
இதனால் பீட்டர்சன் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகி சர்ரே அணிக்காக கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.
சர்ரே அணிக்கும் ஆக்ஸ்போர்டு எம்.சி.சி.யூ. அணிக்கும் இடையேயான 3 நாள் போட்டி நேற்று ஆரம்பமானது. இதில் சர்ரே அணியில் விளையாடிய பீட்டர்சன் 149 பந்தில் 170 ரன்கள் விளாசினர். இதில் 24 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
இதனால் கவுன்ட்டி போட்டியில் திறமையை நிரூபித்துள்ள பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.