↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ரீமா (10) கேள்வி ஒன்றைக் கேட்டார். அதாவது, "உங்களைத் தவிர்த்து வேறு ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் அவரை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்ற ரீமாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் கேமரூன் திகைத்துப் போனார்.
சில நிமிடங்கள் அமைதி காத்த கேமரூன், பின்னர், "வாவ்... இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. காரணம் நாட்டில் நிறைய பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேறொருவர் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்." என சமாளித்து பதில் அளித்தார். மேலும், பிரச்சாரம் முடிந்து கிளம்பும் போது "தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே தலை சிறந்த கேள்வி இதுதான்" என ரீமாவைப் பாராட்டி விட்டுச் சென்றார் கேமரூன்.
Home
»
news
»
news.world
» கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment