↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

‘பீட்சா' பட மிரட்டலுக்கு பிறகு கோலிவுட் படங்கள் திகில், பேய் என்ற பாணிக்கு மாறியது. வரும் படங்கள் எல்லாமே அதே சாயலில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் டிரெண்டு மாற்றுவதற்காக சில இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் விமல் சூரி நடிப்பில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படம் வெளியானது. அடுத்து ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா' என்ற பெயரில் படம் உருவாகிறது. 

இது காமெடி படமா என்றதற்கு இயக்குனர் சந்தோஷ் கோபால் பதில் அளித்தார்.கமர்ஷியல் படம்தான். வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன் ஊர் தாதாவுடன் சுற்றுவதால் அவன் குடும்பம் படும்பாடுதான் கதை.சஞ்சீவ் முரளி ஹீரோ. ஸ்ரீரக்ஷா, அஸ்வினி ஹீரோயின். மற்றும் ரஞ்சித், சாகர், தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், ராஜேந்திரன், மயில்சாமி நடிக்கின்றனர். அய்யப்பன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமன்பிச்சு இசை அமைக்கிறார். உல்லாஸ் கிளிகொல்லூர், சுரேஷ் தயாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top