↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. சர்வதேச புகழ்பெற்றவர். நம்ம ஊர் சிம்பு முதல் பாலிவுட் கான்கள், கபூர்கள் வரை பலர் 
அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்தார்கள். யாருக்கும் பிடிகொடுக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தார். இப்போது முதன் முறையாக டி.வி.நிகழ்ச்சி புரமோஷனுக்காக கேமரா முன் நின்று விட்டார். சோனி பிக்ஸ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் புரமோஷனில் தோன்றி அதனை விளம்பரப்படுத்துகிறார்.

இதுபற்றி சானியா கூறியிருப்பதாவது: டென்னிசுக்கு இடையே இரண்டு வாரங்கள் இடைவெளி கிடைத்தது. அந்த நேரத்தில் டைம் பாசுக்காக இதைச் செய்தேன். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், 23 படங்களில் பெரும்பாலான படங்களை பார்த்துவிட்டேன். டை அனதர் டே, கேசினோ ராயல் எனக்கு பிடித்து படங்கள், டானியல் க்ரேக், பியேர்ஸ் பிரான்ஸ்சன் பிடித்து ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள்.

பாண்ட் கேர்ள் மாதிரி கிளாமர் இமேஜுக்காக இதை செய்யவில்லை. நான் எப்போதும் நானாகவே இருக்கிறேன். இந்த வழியாக பாலிவுட் சினிமாவுக்கு வந்துவிடுவேன் என்று நினைக்க வேண்டாம். டென்னிஸில் எனக்கு மோதுமான சந்தோஷம் இருக்கிறது. அது போதும். என்கிறார் சானியா மிர்சா.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top