↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படம் வெளிவருவதற்கு முன்பு வரை லைக்கா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மீது தான் எதிர்ப்புகள் இருந்ததது. படம் வெளிவந்த பிறகு படம் வசூலை வாரிக்குவித்து வருகின்றது. குறிப்பாக தாய்மார்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் படத்தை பற்றிய பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஒரு கார்பரேட் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக எத்தனைபேர் தங்கள் அடையாளங்களையும், வாழ்க்கைகளையும் தொலைக்கின்றனர் என்பதை ஆணித்தரமாக படத்தில் சொல்லியுள்ளார் முருகதாஸ். ஆனால் கருத்து சொன்ன அவரே ஒரு கார்பரேட் கம்பெனியை வைத்து இந்த படத்தை எடுத்தது தான். பணத்தினால் கார்பரேட் எதையும் வாங்கும் எனக் கத்தி படத்தில் கூறியுள்ளார் முருகதாஸ்.
இதில் இருந்தே தெரிகின்றது... முருகதாஸ் லைக்கா நிறுவனத்தை விடமால் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் பணம் புகுந்து விளையாடி இருக்கின்றது. சரி இது ஏற்கனவே கேள்விபட்ட விஷயம் தான். அதன் பிறகு கத்தி கதை விவகாரத்தில் மீஞ்சூர் கோபியை ஏமாற்றிய செய்தி பூதகரமாக வெடித்தது. தற்பொழுது முருகதாஸ் பல ஆங்கில படங்கள் மற்றும் சீரியல் காட்சிகளில் இருந்து காப்பி அடித்துள்ளார் என்ற செய்தி இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கத்தி படத்தில் பணிபுரிந்த 22 உதவி இயக்குனர்களில் ஒருவர் நம்மிடம் அதிர்ச்சியான செய்தியை உளறிவிட்டார். 22 உதவி இயக்குனர்கள் என்பதே அதிர்ச்சியான செய்திதான். பெரிய பட்ஜெட் படங்களுக்கு  அதிகம்பட்சம் பார்த்தால் 8 அல்லது 10 பேர் தான் அசிஸ்டென்ட்களாக வேலை செய்வார்கள் இந்த படத்தில் 22 பேர் வேலைசெய்துள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை தான். ஆனால் இவர்கள் பெயர்கள் கூட வெளியில் யாருக்கும் தெரிவதில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.
சரி கத்தி படத்தில் என்ன நடத்தது எனப் பார்ப்போம்.... கத்தி படத்தில் முருகதாசுக்கு வலதுகை இடதுகையாக இரண்டு இயக்குனர்கள் மட்டுமே உடன் இருப்பார்கள். அவர்கள் தான் மற்றவர்களை வழி நடுத்துவார்கள். அதாவது அவர்களிடம் இருக்கும் விஷயங்களை அவ்வபோது உருவிக்கொள்வார்கள். ஒவ்வொரு காட்சியும் எடுக்கும் போதும் எப்படி எடுக்கலாம் என்ற டிஸ்கசன் நடக்கும் அதில் யார் நல்லதாக கூறுகின்றனரோ அதைக்குறித்து கொள்வார்கள். கத்தி படத்தில் வரும் முக்கால்வாசி காட்சிகள் உதவி இயக்குனர்களின் யோசனைதானாம்.
மேலும் மாஸ் சீன்கள் வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி டீம் உள்ளதாம். அந்த டீமில் உள்ளவர்கள், இதுவரை பார்த்த ஆங்கிலப்படங்களின் நல்ல காட்சிகளையெல்லாம் முருகதாசிடம் காட்டுவார்களாம். இந்த அயன் படத்தில சிடி சிடியா வாங்கி படம் பாப்பாங்களே.. அதே மாதிரி பாக்குறவங்க தான் அவங்க.  அதில் தேவையான காட்சிகளை காப்பிஅடித்து படத்தை எடுத்து முடித்துவிடுவாராம். ஆனால் இவர்கள் பெயர்கள் கூட வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. அடுத்த படத்தில் வாய்ப்பு என இப்படியே இவர்களிடம் உள்ள விசயத்தை எல்லாம் பிழிந்துவிட்டு விரட்டி அடித்துவிடுவார்கள். இந்த விஷயத்தை கூறியவரும் அப்படிதான் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனைக்கு ஒரு டீம்... காப்பி அடிகிறதுக்கு ஒரு டீம் ஆகமொத்தம் ஒரு பெரிய படையே வேலைசெஞ்சிருக்குது கத்தி படத்துல்ல..
அப்ப காப்பி அடிக்கிறது கூட முருகதாஸ் சொந்த முயற்சி இல்லியா....? சிரியல்ல வர கள்ளத்தொடர்பு மாதிரி... காப்பி மேல காப்பியா போகுதே...
எப்பா சாமி..... ரா பகலா உழைச்சிருக்கேன் என விஜய் விட முருகதாஸ் நல்ல நடிச்சிருக்காருப்பா...

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top