↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாக்யராஜ் என்றாலே முருங்கைக்காய் தான் ஞாபகத்துக்கு வரும். அது மட்டுமின்றி தான் இயக்கும் படங்களில் மறைமுகமாக செக்ஸ் 
அட்டாக் கொடுக்கக்கூடியவர். அவர் படங்களில் வரும் செக்சியான காட்சிகள், டயலாக்குகளை ரசிக்கும் பெண் ரசிகைகளே ஏராளம். அதோடு, பேமிலி செண்டிமென்டிலும் பின்னி எடுக்கும் பாக்யராஜ், முதன்முறையாக அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறார்.

துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார். முதன்முறையாக அரசியல் பேசி நடிக்கும் பாக்யராஜ், சமீபகாலமாக சட்டசபையில் நடக்கும் வேஷ்டி கிழிப்பு, அடிதடி காட்சிகளையும் காட்சி பண்ணியிருக்கிறாராம். அதேசமயம், தனக்கான செக்ஸ் குசும்புகளை அவர் விடவில்லையாம்.

இந்த படத்தில் ஸ்வேதாமேனனை கவர்சசிகரமாக களத்தில் இறக்கி விட்டு, கேரளத்து சேச்சி என்றொரு கிளுகிளு பாடலை வைத்திருக்கிறார் பாக்யராஜ். இதில் ஸ்வேதாமேனனுடன் பாக்யராஜ் ஆட்டமாட, காதல் சந்தியாவுடன் இணைந்து ஜெயராமும் ஆடியிருக்கிறார். அந்த வகையில், கலகலப்பு படத்தில் அஞ்சலி, ஓவியா இருவரையும் சுந்தர்.சி ஆடவிட்டது போன்று இந்த படத்தில் ஸவேதா மேனன், காதல் சந்தியாவையும் கிக் ஏற்றும் வகையில் ஆடவிட்டிருக்கிறார் பாக்யராஜ்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top