↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்றைய இளம் நடிகர்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் விஜய் சேதுபதி. சம்பளத்தை கூட எதிர்ப்பார்க்காமல் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்பவர்.

ஆரம்ப காலத்தில் தனக்கு உதவிய நண்பர்களோ, அல்லது இயக்குனரோ படங்களில் நடிக்க கேட்டால் உடனே ஒப்புக் கொள்வாராம். இப்படி பல நல்ல குணங்களை கொண்ட விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனையில் மாட்டியுள்ளார்.இவர் தற்போது வன்மம், ஆரஞ்சுமிட்டாய், புறம்போக்கு, நானும் ரவுடிதான் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். 

இதனிடையில் வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க ஸ்டூடியோ 9 நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்து அதற்கான அட்வான்சும் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை. 

தனது படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுப்பதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் நடிகர் சங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top