↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய 'பாட்ஷா' என்ற படத்தில் ரஜினி பேசியிருக்கும் பஞ்ச் டயலாக் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்னும் பஞ்ச டயலாக் உருவான விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ரஜினியின் இந்த பஞ்ச் டயலாக் இன்னும் 100வருடங்கள் ஆனாலும் உயிரோடு இருக்கும். ‘பாட்ஷா படபிடிப்பின்போது ஒருநாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரஜினியின்அறைப்பக்கமாக சென்ற உதவி இயக்குனர் ஒருவர் அங்கு கண்ணில் தென்பட்டவேறொரு பணியாளருக்கு ஏதோ உத்தரவிட்டுக்கொண்டே தன்னையறியாமல் சத்தம்போட்டு புலம்பினார்.‘இவன் ஒருத்தன்தான் எதை சொன்னாலும் சட்டுன்னு செய்ய மாட்டான்’என்று புலம்பிக்கொண்டேஅந்த நபரை அழைத்து,‘இனிமே நான் ஒரு தடவஒரு விஷயத்தை சொன்னா அதை நுறு தடவசொன்னதா நினைச்சுக்கோ.தயவுசெஞ்சு அதை முடிச்சுட்டு அடுத்த வேலையபாருப்பா’ என்று கூறிவிட்டு அவசரமாக சென்றுவிட்டார்.  இந்த வசனத்தை கேட்ட ரஜினிக்கு திடீரெனபொறிதட்டியது.

உடனே திருப்பதி என்ற அந்த உதவி இயக்குனரை அழைத்த ரஜினி, ‘அந்தஆளுகிட்ட என்னமோ சொன்னீங்களே. அதை திரும்பசொல்லுங்க’  ரஜினி கேட்க ‘இல்ல சார்… அவன் ஒழுங்காவே வேலை செய்ய மாட்டேங்குறான்.அதான்கூப்பிட்டு கண்டிச்சுட்டு இருந்தேன்’ என்றார் திருப்பதி. ரஜினியின் அமைதியை கெடுத்துவிட்டதாக அவர் அஞ்சிக்கொண்டிருந்த வேளையில், ரஜினி மீண்டும், அந்த நபரிடம் சொன்னதை மீண்டும் சொல்லுங்க என்றார்.

அப்போது திருப்பதி தான் அந்த நபரிடம் அந்தவார்த்தைகளை அப்படியே ரிப்பீட் அடித்தார். அதை அப்படியே மனசுக்குள் வாங்கிக் கொண்டு திருப்பதியை அனுப்பிவிட்ட ரஜினி, பின்னர் அந்த டயலாக்கை கொஞ்சம் மாற்றி நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்று மாற்றி சுரேஷ் கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். இந்த காட்சியை படமாக்கியதும் இந்த டயலாக்கின் சொந்தக்காரர் திருப்பதிதான் என படக்குழுவினர் முன்னர் பகிரங்கமாக கூறிய ரஜினி, அவருக்கு ரூ.25000 பரிசையும் கொடுத்துள்ளார்.

இந்த தகவல் தற்போது ஃபேஸ்புக்கில் வெகு வேகமாக பரவி வருகிறது.
 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top