↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

”நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன். வருவதா, வேண்டாமா என்பதை கடவுள்தான் முடிவு செய்யணும்” – நடிகர் ரஜினிகாந்த்.
அரசியலுக்கு யார் வரவேண்டும், யார் வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்யாதவரை, தமிழகத்தின் எதிர்காலத்தினை, நிகழ்காலத்தினை காப்பாற்ற முடியாது.
தமிழக திரைப்பட உலகத்தின் வணிகமயமான கலைஞர்களால் கடந்த 40 வருடங்களில், கலையுலகம் மட்டுமல்ல, அரசியலும் வணிகமயமானது.
தமிழக மக்களால் ரசிக்கப்படக் கூடியவர்கள் நடிகர்களாக மட்டுமே இருந்து தொலைக்கட்டும்.
மக்களின் மீதான வரியை – திட்டங்களை முடிவு செய்பவர்களாக இவர்கள் மாறினால் நிகழும் சீர்கேடுகளை தமிழர்களைவிட சிறப்பாக வேறு எவரும் கற்றுக்கொண்டது கிடையாது.
ரஜினி மட்டுமல்ல, மக்கள் போராட்ட களத்தில், தனது வணிகநலனை பணயம் வைத்து நின்று போராடாத எவருக்கும் அரசியலில் நுழையும் யோக்கியதை இல்லை.
கலையை, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்று சொன்ன யோக்கியவான்களே, ரஜினி உள்ளிட்டவர்கள் முன்வைக்கும் இந்த அயோக்கியத்தனத்தினை என்னவென்று சொல்வீர்கள்…
நீங்கள் அரசியல் பேசலாம், அரசியலுக்கு வரலாம் ஆனால் உங்கள் படைப்புகளை கேள்விக்குள்ளாக்கினால் ‘படைப்பு சுதந்திரம்’ முனைப்பு பெற்றுவிடும்…
ஒன்றை நினைவில் வையுங்கள். நாங்கள் உங்களை கலைஞர்களாகவும் பார்க்கவில்லை, அரசியல்வாதிகளாகவும் பார்க்கவில்லை. வணிகர்களாக மட்டுமே பார்க்கிறோம். உங்கள் வியாபாரம் எங்கள் வாழ்க்கையை / அரசியலை / வாழ்வாதாரத்தினை / உரிமைப் போரினை பணையம் வைத்தால் உங்கள் வணிகம் பணையம் வைக்கப்படும்.
ரஜினி போன்ற மூன்றாம் தர சந்தர்ப்பவாதிகள் சினிமாவிற்குள் வேண்டுமானால் அரசியல் செய்து கொள்ளட்டும். தமிழ்நாட்டில் நிகழும் தொடர் போராட்டங்களுக்கு குரல் கொடுக்கக்கூட முன்வராதவர்கள் தனது திரைப்படம் விற்பதற்காக தொடர்ந்து இது போன்ற அயோக்கியத்தன விளம்பர வேலைகளை செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது…
தனக்கு வாழ்வளித்த தனது ரசிகர்களை தன் வீட்டு திருமணத்திற்குகூட அழைக்க வக்கற்றவர்கள் இதற்கு மேலும் ரசிகர்களின் உழைப்பினை, உணர்வினை சுரண்டுவது அம்பலப்பட வேண்டும்.
தோழர்களே! தமிழர்கள் தமது உரிமைக்கான போராட்டத்தில் இருக்கும் காலகட்டத்தில் இது போன்ற நபர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு வலிமையான எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள்…
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top