↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அஜித் கௌதம் மேன்ன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகளாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். அடுத்து வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ள படத்திலும் அஜித் ஜோடியாக இரண்டு பேர் நடிக்க உள்ளார்களாம். அவர்கள் இருவருமே விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் சமந்தா, கத்தி படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர், அடுத்தவர் ஸ்ருதிஹாசன், விஜய் தற்போது நடித்து வரும் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவர்களிருவரையுமே அஜித்தின் அடுத்த புதிய படத்தில் நாயகிகளாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் ஒரு படத்தில் ஒரு நாயகி நடிப்பதுதான் இருந்தது.
சமீப காலமாக இரண்டு நாயகியரை நடிக்க வைக்கும் பழக்கம் ஆரம்பமாகி உள்ளது. அது கதைக்காகவா அல்லது இரண்டு நாயகிகள் வேண்டும் என்பதற்காக கதையை மாற்றுகிறார்களா என்பது தெரியவில்லை. ரஜினியின் லிங்காவில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, விஜய்யின் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூர்யாவின் மாஸ் படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டிரண்டு ஹீரோயின்கள் இடம் பெறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் அஜித்தின் என்னை அறிந்தால் ஏற்கெனவே இடம் பெற்று விட்டாலும், அஜித்தின் அடுத்த படமும் மீண்டும் அந்த வரிசையில் இடம் பெறுகிறது.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top