↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பாளர்கள் தற்போது அலரிமாளிகையின் பக்கவாட்டு மாநாட்டு அரங்கத்தில் குழுமியுள்ளனர். முக்கிய அமைச்சர்கள் பலரும் அங்கு சமூகமளித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்த அவசரக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
மேலும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான நபர் குறித்த கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. இதன்போது பெரும்பாலும் கோட்டாபய பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கட்சி தாவி பொதுவேட்பாளராகத் தெரிவாகியுள்ள மைத்திரிபால சிரிசேன வகித்த கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அனைவரினதும் பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆளும் கட்சியின் உறுப்பினர்களது பதவிகள் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பறிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, துமிந்த திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
ரஜீவ விஜேசிங்க வாகனத்தை கையளித்தார்
தமது உத்தியோகபூர்வ வாகனத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு கையளித்து விட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தபோது> வாகனத்தை கையளிக்குமாறு ரஜீவ விஜேசிங்கவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இதனை அவர் குறித்த செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார்.
இந்தநிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் தாம் குறித்த வாகனத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவிட்டதாக ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Video BBC

Video BBC

Video BBC
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top