↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பில் கோஸ்பி (வயது 77). கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான ஜேன்ச் டிக்கின்சன் (59) 1982ம் ஆண்டு கலந்து பில் கோஸ்பி தனக்கு மதுவில் போதை மாத்திரை கலந்து கொடுத்து கற்பழித்துவிட்டதாக புகார் கூறி இருந்தார்.
இந்த சூடு தணியும் முன்பே மற்றொரு பெண்ணும் கோஸ்பி மீது இதே புகாரை கூறி உள்ளார்.57 வயதாகும் போகா ராடன் என்ற புளோரிடாவை சேர்ந்த அவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார். தான் 19 வயதாக இருக்கும் போது 1976 ஆம் ஆண்டு பில் கோஸ்பி தன்னை லாஸ்வேகாசில் வைத்து போதை மாத்திரை கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாக கூறி உள்ளார். அப்போது தனக்கு சிறிய வயது இந்த சம்பவம் குறித்து பேசி அவமானப்படவேண்டாம் என கருதியதால் இதை வெளியே சொல்ல வில்லை என கூறி உள்ளார்.
இத்துடன் கோஸ்பி மீது 4 பெண்கள் இதே போன்ற புகாரை கூறி உள்ளனர்.
ஜோன் தர்ஷிஸ் எனபவர் 1969 இல் கோஸ்பி தன்னை லாஸ் ஏஞ்சல்சில் வைத்து போதை மருந்து கொடுத்து 2 முறை கற்பழித்ததாக புகார் கூறி உள்ளார். 17 வயதான பார்பரா பவ்மேன் இவர் 1985 இல் கோஸ்பி தன்னை மூளைசலவை செய்து பலமுறை கற்பழித்து உள்ளதாக கூறி உள்ளார்.கோஸ்பியால் 13க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top