தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ( International Indian Film Festival of South Africa (IIFFSA).) நடத்தப்படுகிறது.
இருநாடுகளின் பிராந்திய மொழிப் படங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சனிக்கிழமை இரவு ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை. இதையடுத்து அவரை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
.....................................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.