↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


பொதுவாகவே சினிமா துறையில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்கிற ஒரு அசிங்கத்தனமும் இருக்கிறது என்பது நாடறிந்த விஷயம்..
எல்லோரும் அப்படியில்லை.. ஆனால் ஒரு சிலர் இப்படித்தான். இந்தியாவின் எந்தவொரு மொழி திரைப்படத்திலும் கலைஞர்களைவிடவும் வியாபாரியாக உள்ளே நுழைந்தவர்களின் இது போன்ற செயல்களால் அனைத்து இந்திய திரையுலகங்களுக்கும் ஏகத்திற்கும் கெட்ட பெயர்.
சமீபத்தில்தான் கேரளாவில் ஒரு நடிகையிடம் “அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு வர்றியா” என்று பேஸ்புக்கில் கமெண்ட் போட்டே கேட்டு மாட்டினார் ஒரு தயாரிப்பாளர். (இது பற்றிய செய்தி இந்தப் பதிவில் உள்ளது)
இப்போது கன்னட தேசம்..
சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் இருக்கும் டிவி 9 கன்னட சேனல் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
சில தயாரிப்பாளர்கள்.. சில இயக்குநர்களிடத்தில் பெண்களை அனுப்பி அவர்களை ஹீரோயின் சான்ஸ் கேட்க வைத்து.. அப்படி கேட்க வைத்த சூழலில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்தப் பெண்களிடம் அதற்கு முன் அவர்கள் தங்களிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்க.. அதை அப்படியே டேப் செய்து ஒளிபரப்பிவிட்டது.. கன்னட திரைப்பட உலகத்தில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்.
முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியதே இயக்குநர் குருதேஸ்பாண்டே என்பவரிடத்தில் இருந்துதான்.. அவர் சமீபத்தில்தான் தனது முதல் படத்தை இயக்கி வெளியிட்டார். அது தமிழில் ‘சுந்தரபாண்டியனா’க வெளிவந்த திரைப்படத்தின் கன்னட ரீமேக். படத்தின் பெயர் ‘ராஜஹூலி’.
இந்த இயக்குநரிடம் ஒரு மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றும் ஒரு இளம் பெண் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு சென்றுள்ளார். முதல் நாள் அவர் சுடிதாரில் செல்லவே, நாளை சேலை அணிந்து வந்து தன்னை சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் குருதேஷ்பாண்டே.
மறுநாள் சேலை அணிந்து அந்தப் பெண் செல்ல..  இதன் பின்பு நடந்ததை அந்த பெண்ணே அந்தத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்லியிருக்கிறார்.
“நான் இயக்குநர் குருதேஷ்பாண்டேயின் முன்னால் சென்று நின்றதும், என்னை ஏற இறங்க பார்த்தார். பிறகு என் அருகே வந்து, என் வயிற்றில் கை வைத்து தடவினார்.  எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதன் பிறகு தொடக் கூடாத இடங்களை தொட்டு தடவினார். ‘இந்த’ இடத்தில் சதை கொஞ்சம் குறைய வேண்டும், ‘இந்த’, ‘இந்த’ இடங்களில் சதை அதிகமாக இருக்க வேண்டும் என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அவர் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.. அவரது எண்ணத்தை புரிந்து கொண்டு அதற்கு மேல் அங்கேயிருக்க விரும்பாமல் நான் அவரது கையைத் தட்டிவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வந்தேன்.
அன்றிரவு போனில் என்னை தொடர்பு கொண்டார். ‘நான் இப்போது குடித்திருக்கிறேன்.  என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. நீ உடனே எனக்கு வேணும்.. இப்போ வர்றியா..?’ என்று அழைத்தார். மேலும், ‘இதெல்லாம் சினிமா உலகில் சகஜம்’ என்று கூறி சில நடிகைகள் பெயரை சொல்லி, ‘அவர்களெல்லாம் இப்படி அட்ஜஸ்ட் செய்துதான் இப்போது பெரிய நடிகைகளாகிவிட்டனர்..’ என்றார்.
அன்று காலையிலேயே ‘பிகினி அணிந்து நடிக்க தயாரா…?’ என்று கேட்டார். நான் ‘சரி’ என்று சொல்லியிருந்தேன். அதனை ஞாபகப்படுத்திய குருதேஸ்பாண்டே, ’பிகினி அணிய வெட்கம் இல்லாதபோது, படுக்கையை பகிருவதில் வெட்கம் இருக்க தேவையில்லையே?’ என்றார்.  நான் அவரது போனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கட் செய்துவிட்டேன். அவரது அடுத்தடுத்த போன் அழைப்புகளை நான் எடுக்கவேயில்லை. அதோடு சினிமா ஆசைக்கும் முழுக்கு போட்டுவிட்டேன்..” என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண்.
இதோடு கூடவே தான் டேப் செய்து வைத்திருந்த இயக்குநர் குருதேஷ்பாண்டேவின் ஜொள்ளு பேச்சையும் பத்திரிகையாளரிடம் போட்டு காண்பித்திருக்கிறார். 
இதுவொன்று போதாதா..?
களத்தில் குதித்த டிவி 9 சேனல்.. சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவுலகில் இவர் போன்று சபலப் புள்ளிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரித்து அவர்களில் சிலருக்கு மட்டும் பிராக்கெட் போட்டுள்ளது.
வந்திருப்பது எலிப்பொறி என்பது தெரியாமல் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் சபலத்துடன் வெளிப்படையாக அட்ஜெஸ்ட்மெண்ட் பேரம் பேச வசமாக மாட்டிக் கொண்டார்கள். நாள் முழுவதும் டிவி 9 சேனலில் போட்டுத் தாக்கிய தாக்குதலில் கன்னட சினிமாவுலகமே இப்போது பரபரப்பில் இருக்கிறதாம்..
இயக்குநர் குருதேஷ் பாண்டேவிடம் சேனல் சார்பில் ஒரு பெண்ணை சினிமா சான்ஸ் கேட்பது போல நடிக்க செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். அவர் நிச்சயம் சான்ஸ் தருவதாக கூறி அந்த பெண்ணை கட்டியணைத்து பெட்டில் தள்ளுவது ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்பட்டு அதுவும் ஒளிபரப்பாகிவிட்டது.
இவர் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஓம்பிரகாஷ் ராவ், தயாரிப்பாளர்கள் திவாகர் பாபு, கோவிந்த் ராஜு ஆகியோரிடமும் இதேபோல் ரகசிய கேமரா ஆபரேசன் நடத்தி, சான்ஸ் கேட்டு போன பெண்களிடம் அவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது அந்த சேனல்.
தாங்கள் வசமாக மாட்டிக் கொண்டது தெரிந்து சம்பந்தப்பட்டவர்கள் கொதித்துப் போய் பத்திரிகை உலகத்தை வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார்கள். இதில் டிவி 9 ரிப்போர்ட்டரை தயாரிப்பாளர் திவாகர் பாபு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய.. இதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை கூட்டிவிட்டது. பின்பு வேறு வழியில்லாமல் திவாகர் பாபு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தில் அதில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இப்போது கன்னட பிலிம் சேம்பர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இதில் உண்மை நிலையை அறிய ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழு சொல்லப் போகும் முடிவை பொறுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்களாம்..!
ஸ்டிங் ஆபரேஷனை கட்டுப்படுத்த தனி சட்டம் தேவை என்று அரசியல்வாதிகள் கூறிவரும் வேளையில் இந்த விஷயத்திற்கு இது போன்ற ஆபரேஷன்கள் அவசியம் தேவைதான்..! அப்போதுதான் இனி வரும் புதிய சினிமாக்கார வியாபாரிகளும் கொஞ்சம் பயத்துடன் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள்..!
நன்றி : டிவி 9 கன்னட சேனல்
.....................................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top