அரியானா மாநில சாமியார் ராம்பால் நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக பேசிய சாமியார் நான் குற்றமற்றவன் என்றும், எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைதும் தவறானவை என்றும் கூறினார்.
அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள ஆஸ்ரமத்தில் சாமியார் ராம்பாலை பலர் பின்பற்றி வருகின்றனர். இவர் மீது கொலை வழக்கு தற்போது நிலுவையில் உள்ள போதும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.
இதனையடுத்து கோர்ட்டின் வாரண்ட் படி சாமியார் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய முற்பட்டப்போது ஆசிரமத்தில் போலீசாருக்கும், அங்குள்ள சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. போலீசார் தண்ணீர் புகை குண்டு வெடித்து கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவத்தினால் ஆசிரமம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் 6 பேர் உயிழந்தனர்.
போலீசார் வசம் உள்ள சாமியார் நேற்று மதியம் 2 மணி அளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 28ம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் கோர்ட் வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுவரை போலீசில் சிக்கிய சாமியார்கள்:
இந்தியாவில் சாமியார்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதுவரை 8க்கு மேற்பட்டவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கற்பழிப்பு, கொலை, நிலம் அபகரிப்பு, மோசடி போன்றவை இந்த சாமியார்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளது.
நித்தயானந்தா ( பிடதி ஆஸ்ரமம், கர்நாடகா).
குர்மீத் ராம் ரகுசிங் ( அரியானா மாநிலம் , சிர்சா ) .
சந்திரா ஸ்வாமி ( பான் புரோக்கர், வரி ஏய்ப்பு குற்றம்).
ராம்பால் ( கொலை வழக்கு ) (ஹிசார், அரியானா)
ஆசாராம் பாபு ( கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு) , (ராஜஸ்தான்).
பிரேம்மானந்தா ( கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு) (திருச்சி).
சுவாமி சதாச்சாரி ( விபசார தொழில் நடத்தியதாக குற்றச்சாட்டு), டில்லி.
பீமானந்தஜி மகராஜ், (லாஜ்பத் நகர், பஞ்சாப் எல்லை).
0 comments:
Post a Comment