↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


எப்பதாம்பா வரும் இந்த என்னை அறிந்தால் என்று சலிப்புத் தட்டும் அளவிற்கு தான் இருக்கிறது என்னை அறிந்தால் படத்தின் படபிடிப்பு. முதலில் தீபாவளிக்கு வரும் என்று கூறப்பட்டது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரே தீபாவளி முடிந்து தான் வந்தது. அதன் பிறகு படத்தை பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை, இப்ப முடியும் அப்ப முடியும் என்று கூறும் நிலையில் தான் படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் சமீபத்தில் வாங்கிய பின்பு தான் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் பிறந்தது. ஆனால் படத்திற்கான மொத்த பாடலையும் இன்னும் ஹாரிஸ் ஜெயராஜ் முடிக்கவில்லையாம், அனேகன் படத்தின் பின்னனி இசை சேர்பதில் பிஸியாக இருந்துவிட்டதால், மூன்று பாடலுக்கு மட்டும் தான் இசை அமைத்து உள்ளாராம். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் படத்தை வரும் பொங்கலுக்கு கட்டாயம் வெளியிடுவோம் என்று கூறிவருகிறது படக்குழு.
கார்த்தி, லட்சுமிமேனன் நடிப்பில் பிஜி முத்தய்யா இயக்கத்தில் உருவாகிவரும் கொம்பன் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழில் மாமியார் மருமகளை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கிறது. முதல் முறையாக மாமனாருக்கும், மருமகனுக்கு இடையே இருக்கும் பாசத்தை வைத்து கிராமத்து பின்னனியில் எடுக்கப்பட்டு வரும் படம் தான் கொம்பன். இந்த படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பிஜி முத்தய்யா.
அதே பொங்கலுக்கு தான் அஜித்தின் என்னை அறிந்தால் படமும் வெளியாகிறது. ஒருவேளை என்னை அறிந்தால் படம் குறிப்பிட்ட தேதியில் வருவது சந்தேகம் தான் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பார்களோ….இதுவரை சொன்ன தேதியில் எதுவும் நடந்ததில்லை என்னை அறிந்தால் படத்தில்.
இந்த இரண்டு படமும் குறிப்பிட்ட தேதியில் வருகிறதோ இல்லையோ சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் ஆம்பள திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏனெனில் விஷால் இதுவரை தயாரித்த அனைத்து படங்களும் குறிப்பிட்ட தேதியில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.....................................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top