தனது படம் வெளிவரும்போதெல்லாம் ரசிகர்களை சந்திக்கப் போறேன், அரசியலில் இறங்கி ரிவிட் அடிக்கப் போறேன் என்றெல்லாம் எடுத்துவிட்டு அப்பாவி ரசிகர்களை எழுச்சிபெற வைப்பது உச்ச நடிகரின் வாடிக்கை.
இந்தமுறையும் அப்படியொரு ரிப்பீட் டயலாக்குடன் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார். உச்சத்தின் மீதுள்ள பக்தியில் மண் சோறு சாப்பிடுகிற ரசிகர்கள் கணிசமாக இருந்தாலும் சிலர் விழிப்புணர்வு அடைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
மகளின் கல்யாணத்துக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று கட்டளையிட்டு அது சர்ச்சையானதும் ரசிகர்களுக்கு கறி விருந்து அளிப்பதாக கூறினார் உச்சம். அந்த ட்ரீட் இன்னும் பெண்டிங்கில் இருக்கிறது. அதை நினைவுவைத்து, தலைவா குஸ்காவாவது கிடைக்குமா என்று பாடல் வெளியீட்டு அரங்கத்துக்கு வெளியே உச்சத்தின் சில ரசிகர்கள் கமெண்ட் அடித்ததை கேட்க முடிந்தது.
இப்படி கேட்பார்கள் என்று அவருக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்?
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment