↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்று 2014 நவம்பர் 21 வெள்ளியன்று 5 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
1. நாய்கள் ஜாக்கிரதை
Naaigal-Jaakirathai-poster-1
நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்திருக்கும் படம் இது. இதில் சிபிராஜ், அருந்ததி நடித்திருக்கின்றனர். கரண் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிஸார் ஷஃபி இசையமைத்திருக்கிறார். கே.எல்.பிரவீண் எடிட்டிங் செய்திருக்கிறார். சக்தி செளந்தர்ராஜன் எழுதி, இயக்கியிருக்கிறார். Cosmo Village நிறுவனம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது.
2. காடு
Vidharth in Kaadu Movie Posters
சக்கரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் திருச்சி நேருநகர் நந்து தயாரித்திருக்கும் படம். இதில் விதார்த், சமுத்திரகனி, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, சம்ஸ்கிருதி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங் செய்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத கே இசையமைத்திருக்கிறார்.
3. விழி மூடி யோசித்தால்
Vizhi-Moodi-Yosithal-Movie-Posters
Twister Films சார்பில் கே.ஜி.செந்தில்குமார் தயாரித்து, எழுதி, நடித்து இயக்கியிருக்கிறார்.  இதில் புதுமுகம் நிகிதா இவரது ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஊர்வசி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாலாசிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
4. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை
chinnanjchiriya vannaparavai-poster
அஸ்வின்குமார், அனு கிருஷ்ணா, ஜெனீபர், கராத்தே ராஜா, ரோபோ சங்கர், தோழர் ராஜேந்திரன் ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். எஸ்.விவேக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சைமன் ஆபிரகாம் இசையமைத்திருக்கிறார். விஜயன் எழுதி, இயக்கியிருக்கிறார். 
5. வன்மம்
Vanmam-movie-poster
விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். நேமிசந்த் ஜெபக் தயாரித்திருக்கிறார். பாலபரணி ஒளிப்பதிவு செய்ய.. எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். ஜெய் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
6. NINJA-2 – English Dubbing

.....................................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top