↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போக செய்யும் விதமாக அந்த வழக்கின் முன்னாள் அரசு வக்கீல் பி.வி.ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்கள் மூலம் நெருக்கடி தரப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வக்கீலாக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்து வழக்கின் போக்கையே நேர் கோட்டுக்கு கொண்டு வந்தவர்.

இந்நிலையில் கர்நாடகாவில் சதானந்தகவுடா தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்களிடமிருந்து நெருக்கடி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்ஆச்சாரியா வெளியிட்ட அவரது சுய சரிதை புத்தகத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். நெருக்கடி அதிகரித்த நிலையில் அரசு வக்கீல் பதவியையே ஆச்சாரியா ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. அதன்பிறகுதான் அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியதாக நீதிபதியாலே குற்றம்சாட்டப்பட்டு அபராத விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, ஆச்சாரியா குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதும் மத்திய அரசு, உளவுத்துறை மூலம் உண்மை தகவல்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஆச்சாரியாவை குறிப்பிட்ட காலகட்டத்தில் யார் யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர், யாரெல்லாம் அவரை நேரில் சந்தித்து பேசினர் என்பது போன்ற தகவல்களை சேகரித்துள்ளனர். அதில் கர்நாடக பாஜக தலைவர்கள், டெல்லி பாஜக தலைவர்கள் சிலரது பெயர் சிக்கியுள்ளது. தமிழக பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆச்சாரியாவுக்கு நெருக்கடி தர முனைந்ததும் உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அறிக்கையை பார்த்து, பிரதமர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிறது டெல்லி வட்டாரம். நீதித்துறை செயல்பாடுகளில் அரசியல் நுழையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பதால், அதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் கிலியில் உள்ளனர்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top