ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய மாட்டார் பாஜக தான் ரஜினியில் சேர வேண்டும் என்று ட்வீட்கள் செய்யப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்த கேள்விக்கு அவர் பல முறை பதில் அளித்தும் அதன் அர்த்தம் தான் யாருக்கும் புரியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் பாஜக ரஜினியை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு வர பிரயத்தயனம் செய்கிறது. அவரும் வர மாட்டேன் என்பதை ஜாடை மாடையாக கூறினாலும் முயற்சி செய்தால் நடக்காதது ஒன்றும் இல்லை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்த் பாஜகவில் இணைகிறார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அது இலக்கண பிழையாகும். பாஜக தான் ரஜினியில் சேர முடியும் என்று தெரிவித்துள்ளார். அந்த ஆளுக்கு குசும்பை பாரு என்று நினைக்க வேண்டாம். ரஜினி ட்விட்டரில் சேர்ந்த நாள் நினைவில் உள்ளதா. அன்று டிவியில் ஓடிய பிளாஷில் எல்லாம் ட்விட்டர் ரஜினியில் சேர்ந்துவிட்டது என்று தானே தெரிவித்தார்கள். ரஜினி என்று வந்தால் இந்த உல்டா மேட்டும் கூடவே வரும்.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment