நடிகர்கள் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் திருட்டு விசிடிகளை ஒழிக்க வேண்டும் என்று உறுதியோடு உள்ளது.இது தொடர்பாக சமீபத்தில் நடிகர் ராதாரவி தலைமையிலான ஒரு குழு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் தான் திருட்டுவிசிடிக்கள் அதிகமாக தயாரிக்கப்படுவதால் தாங்கள் மனது வைத்தால் அதை தடுத்து நிறுத்தலாம் என்றும் புதுச்சேரியில் திருட்டுவிசிடிக்கு எதிரா கடுமையான சட்டம் கொண்டு வாங்க எனவும் முதல்வரிடம் கூறியுள்ளார் ராதாரவி. அப்படியா? என யாருக்கோ ஒருவருக்கு போன் செய்துள்ளார் ரங்கசாமி.சிறிது நேரத்திற்கு பிறகு ரங்கசாமி கூறுகையில், நீங்க திருட்டு விசிடின்னு இவ்வளவு கேவலமா சொல்லுறீங்க... இத நம்பி, 10000 குடும்பம் பிழைக்குது. ஏதோ அவங்களுக்கு தெரிஞ்ச தொழில பண்ணுறாங்க. மேலும் பெரிய பெரிய மெஷின் எல்லாம் இறக்கி முதலீடு பண்ணிருக்காங்களாம் அவங்க வயித்துல அடிக்க சொல்லுறீங்களே என்று கூறியுள்ளார்.
மேலும், மக்கள் திருட்டு விசிடிய விரும்புறதுக்கு காரணமே நீங்க தான். திரையரங்க டிக்கெட்டுகளை பலமடங்கு உயர்த்தி வச்சு விக்குறீங்க, ஏழை மக்கள் தியேட்டர் பக்கமே போக முடியாம தான் சிடி வாங்குறாங்க. ஆனா உங்க தரப்பில் உள்ள குறைகள மறச்சு, திருட்டுவிசிடின்னு ஒரு வார்த்தைய வச்சு ஏழை மக்களுக்கு சேவை செய்றவங்கள தரக்குறைவா பேசுறீங்க. முதல்ல நீங்களும் உங்க சங்கங்களும் மாறுங்க சார்... அப்புறம் வாங்க, நீங்க சொல்லுறத பத்தி யோசிக்கலாம்... என சொல்லாமல் சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment